பதிவர்களுக்கு பகிரங்க எச்சரிக்கை - திருடப் படும் பதிப்புகள் - தமிழ் இதழ்களின் யோக்கியதை (ஆதாரத்துடன்......)

>> Friday, October 17, 2008

தமிழிஸ் , தமிழ்மணம் போன்ற மேலும் பல திரட்டிகளும் எடுத்துக் கொண்ட கடின முயற்சிகளாலும் , பதிவர்களுக்கு கொடுத்துவரும் சீரிய ஊக்குவிப்பினாலும் தமிழ் பதிவு உலகம் என்பது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருவது மகிச்சியான விசயமே.

புதிய புதிய பதிவர்கள் தினந்தோறும் உருவாகிறார்கள், எழுத்துப் பணியில் வாய்ப்பு என்பது ஒருசிலருக்கு மட்டுமே வாய்க்கும் , ஆனால் வலைப்பூ உலகத்தால் அனைவருமே தங்களது எண்ணங்களை, சிந்தனைகளை , ஆசைகளை, கடந்து போன பசுமையான நினைவுகளை, சோகங்களை , வேதனைகளை என எல்லா விஷயங்களையும் மற்றவர்களுடன் எளிதில் பகிர்ந்து கொள்ள முடிகிறது.

நம்முடைய எழுத்திற்கும் இவ்வளவு வரவேற்பா என பலரும் பல நேரங்களில் திகைத்துப் போனதுண்டு , இதனால் கிடைக்கும் ஊக்கங்களும் வரவேற்பும் பதிவர்களை மேலும் முன்னேறி செல்லத் தூண்டுகிறது , புதிய எல்லைகளை பதிவர்கள் அடைய துணை செய்கிறது.

பெயரில்லாமலும் , முகமூடி போட்டுக் கொண்டும் சில அறிவு மேதைகளும் , சான்றோர்களும் கொடுக்கும் பின்னூட்டங்கள் மற்றும் சில முகமில்லாதவர்களின் ஆபாசப் பின்னூட்டங்கள் போன்றவை , சில நேரங்களில் பதிவர்களை மனமுடைய செய்து அவர்களின் ஊக்கத்தை சீர்குலைப்பதாக அமைந்து விடுவதும் உண்டு.

இலக்கியத் தரமாக இப்படி எழுத வேண்டும் ,அப்படி எழுத வேண்டும் என்று அவசியமில்லாத அறிவுரைகளைக் கூறி பதிவர்களின் பயணத்தை சீர்குலைக்கின்றனர் சிலர் ,

இது போன்ற அறிவு ஜீவிகளின் தாக்குதல்களுக்கு சில நேரங்களில் முன்னணி வலைப்பதிவர்கள் கூட மதிப்பளிப்பது வேதனையாக உள்ளது .
இது போன்ற மேதாவித் தன விமர்ச்சனகளைப் புறந்தள்ளி நாம் நமது பாதையில் தொடர்ந்து நடை போடுவதே அவர்களுக்கு நாம் கொடுக்க வேண்டிய மரியாதை ஆகும் .

சங்க இலக்கியங்கள் எழுதப் பட்டது போல மரபு இலக்கணம் மீறாமல் இன்று வைரமுத்து பாடல்கள் எழுதிக் கொண்டிருந்தால் அவரது நிலைமை என்னவாகும் என நினைத்துப் பாருங்கள் , எழுத்து பேச்சு என்பது காலத்திற்கு ஏற்ப மாறுதல்களை சந்தித்து வருவதுதான் வளர்ச்சியின் அடையாளம் .

இன்றைக்கு நீங்கள் சுஜாதாவின் எழுத்தைப் படியுங்கள், ஜெய காந்தனின் எழுத்தைப் படியுங்கள் அவர்களின் நடையைப் பாருங்கள் , அதைப் போல பழகி எழுதுங்கள் என்று கூறுகிறார்களே , சுஜாதாவின் எழுத்து நடையை விரும்புபவர்கள் அவரது எழுத்தையே படித்து விடுவர் அல்லவா ?

இன்று ஒவ்வொரு பதிவருக்கும் ஒரு நாளுக்கு ஆயிரம் ஹிட்டுகள் விழுகிறது என்றால் அது அவரின் எழுத்தில் உள்ள தனித்தன்மைக்காக மட்டுமே .

பதிவர்களின் பதிவுகள் எந்த அளவிற்கு சிறப்பாக உள்ளது என்பதை இது போல மேதாவித்தனமாகப் பின்னூட்டமிடும் சான்றோர்கள் தான் அறியவில்லை, தமிழ் பதிவர்களின் பதிவுகளின் அருமை பல பத்திரிக்கைகளுக்கு தெரிந்தே உள்ளது .

வலைப்பூ உலகத்தில் பதியப்பட்ட பதிவுகள் அப்படியே திருடப்பட்டு இதழ்களில் வெளியிடப்படுகிறது.
ஆதாரம்:

கம்ப்யூட்டர் உலகம் இந்த (அக்டோபர்) மாத இதழில் நண்பர் அறிவிழி சென்ற செப்டம்பர் மாதம் எழுதிய மென்பொருளாளர்கள் பற்றிய பதிவு வரி மாறாமல் வெளியிடப்பட்டுள்ளது

தமிழ் கம்ப்யூட்டர் இந்த (அக்டோபர்) மாத இதழில் நண்பர் தமிழ் நெஞ்சம் சென்ற செப்டம்பர் மாதம் எழுதிய கணினி பற்றிய பதிவு வெளியிடப்பட்டுள்ளது .
(இது போல நிறைய இருக்கும் என்றே எண்ணுகிறேன் )

பதிவுகள் பதிவர்களிடம் அனுமதி கேட்காமல் அப்படியே அச்சு பிசகாமல் வெளியிடப்படுவது திருட்டுதானே .
பதிவர்களுக்கு இது ஒரு இழப்பாக தெரிந்தாலும் , பெரும்பாலும் தொழில்முறையில் இல்லாமல் எழுதும் பதிவர்களுக்கு ஒரு வகையில் இது பெருமையாகவும் , ஊக்கமாகவும் இருக்கும் .

சில பத்திரிக்கைகளில் வரும் செய்திகளை பதிவுகளாக வழங்கும் போது பதிவர்கள் , பத்திரிகை செய்தியை அப்படியே (copy& paste ) அச்சிடுவதை தவிர்த்து தாங்கள் படித்த அந்த செய்தியை தங்கள் கண்ணோட்டத்தில் சொந்தமாக எழுதி வெளியிடுவது பதிவுலகின் தரத்தை மேலும் உயர்த்தும் என நான் நம்புகிறேன் .

பதிவர்களின் தரம் இந்த அளவிற்கு உயர்ந்து கொண்டிருக்கும் பொது தேவையில்லாமல் இது போல வரும் மேதாவித் தனமான , அல்லது ஆபாசமான பின்னூட்டங்களை கண்டு பதிவர்கள் கலக்கம் அடையாமல் தொடர்ந்து தங்களது நடையிலேயே சீரிய முறையில் எழுதி வந்தால் பதிவுலகிற்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதாகவே தெரிகிறது......



என்றென்றும் நன்றியுடன் உங்கள் சுந்தரேசன்

4 comments:

Tech Shankar October 18, 2008 at 2:16 AM  

தமிழ்கம்ப்யூட்டர் இதழின் அந்தக் குறிப்பிட்ட பக்கத்தின் ஸ்கேன் காப்பியை எனக்கு அனுப்பி வைக்க இயலுமா.
மின்னஞ்சல் முகவரி : tamilnenjam@bangalorerocks.in

Thanks Dear சுந்தரேசன்

Sundaresan October 18, 2008 at 5:59 AM  

நல்லது , வாழ்த்துக்கள்

Anonymous October 18, 2008 at 8:39 AM  

நல்ல கட்டுரை... பதிவர்கள் கடைபிடித்தால் நல்லது. பதிவுலகம் அச்சு துறையை விட பெரியது. நல்ல எதிர்காலம் உண்டு. பதிவு எழுதி ஒரு நாளுக்கு தமிழ்மணம், தமிழிஷ் மூலமாக 1000 ஹிட்ஸ் கிடைப்பது பெரிய விசயம்தான். தமிழ் இணைய வளர்ச்சி ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. தமிழ் மக்கள் மத்தியில் டிவி போன்று இணையம் பிரபலம் ஆகும் நேரத்தில் பத்தாயிரக் கணக்கில் ஹிட்ஸ் வந்தாலும் வரலாம்.

Tech Shankar April 27, 2009 at 12:00 AM  

விரைவில் மலரும்

//தமிழ் இணைய வளர்ச்சி ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. தமிழ் மக்கள் மத்தியில் டிவி போன்று இணையம் பிரபலம் ஆகும் நேரத்தில் பத்தாயிரக் கணக்கில் ஹிட்ஸ் வந்தாலும் வரலாம்.

Back to TOP