இல்லாத நக்சலைட்டுக்கு 40 நிமிடம் துப்பாக்கிச்சண்டை

>> Friday, December 19, 2008

ஆந்திர மாநிலத்தில் உள்ள போலீஸூக்கு தானியங்கி துப்பாக்கி தரப்பட்டுள்ளது. அதில் ஒரு போலீஸ்காரர் தெரியாமல் அவரிடம் உள்ள துப்பாக்கியை வெடிக்க செய்துவிட்டார். எங்கே தான் மாட்டிக் கொள்வேம் என்ற அச்சத்தில் அவர் போலீஸ் ஸ்டேசனில் நூழைந்து நக்சலைட் தன்னை துப்பாக்கியால் தாக்குவதாக கூற மற்ற போலீஸூம் தங்கள் பங்கிற்கு தங்களிடம் உள்ள துப்பாக்கியால் அவர் கூறிய திசையை நோக்கி கண்மூடித்தனமாகச் சுட ஆரம்பித்துள்ளனர். கிட்டத்தட்ட 40 நிமிட கண்மூடித்தனமான துப்பாக்கி சூடு நடத்தியபின் நக்சலைட் ஒடுக்கப்பட்டதாக துப்பாக்கிச் சண்டையை முடித்துக்கொண்டனர். உடனடியாக மேலிடத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கிருந்து நக்சலைட்களை ஒடுக்கியதற்கு மேலிடத்திலிருந்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பாராட்டை நேரில் தெரிவித்து சம்பவ இடத்தை பார்வையிட மேலிடத்திலிருந்து உயர் அதிகாரிகள் அங்கு வந்துள்ளனர்..

சம்பவ இடத்தை பார்த்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
போலீஸ் ஸ்டேசனில் நக்சலைட் தாக்கியதாக சொல்லிருந்தனர். இவர்கள் நக்சலைட் என துப்பாக்கி சூடு நடத்திய தடங்கள் தெரிந்தது.. ஆனால் நக்சலைட் எதும் திரும்ப தாக்கியதிற்கான எந்த தடமும் இங்கு காணப்படவில்லை. சந்தேகம் கொண்ட உயர் அதிகாரிகள். முதலில் தகவல் அளித்த அந்த போலீஸ்க்காரரை விசாரித்ததில் அவர் தான் தன் துப்பாக்கியை தவறாக பயன் படுத்திவிட்டதைக் கூறியுள்ளார். தான் மாட்டிக் கொள்ளக்கூடாது என இப்படி வதந்தியை பரப்பியதாகவும் அவர் உண்மையை ஒத்துக்கொண்டார்.

இல்லாத நக்சலைட்டுக்கு 40 நிமிடம் துப்பாக்கி சண்டை நடத்திய போலீஸ் கூட்டத்தை என்னவென்று சொல்வது..

வதந்தியை கிளப்பிய போலீஸ்க்காரர் மீது நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் உத்தரவுபிறப்பித்துள்ளனர்.

ஆந்திரா மாநிலத்தில் இல்லாத நக்சலைட்டுக்காக நடந்த துப்பாக்கி சண்டை மக்களிடம் கேலிக்கூத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more...

Back to TOP